சிறந்த வியாபார ஆதரவாளர் விருதுகள் (Top SME Supporter Awards). 1996-இல் சிறந்த வியாபர ஆதரவாளர் விருது முதல் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. வங்கி பங்குதாரர்களின் பங்களிப்பும் தொடர்ந்து ஆதரவு தருவதற்கும் எல்லா துறைகளிலும் திறன் கொண்ட வங்கிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அவர்களின் மத்தியில் உத்தரவாத கடன் மதிப்பு, கடன் வளர்ச்சியும் வருமான வளர்ச்சியும் நிகராக வளருதல் மற்றும் இயல்பு நிலை விகிதம் ஆகிய விதிகளின் அடிப்படையில் சி.ஐி.சி விருது பெற்றவர்களை தீர்மானிக்கப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை, 23 வர்த்தக மற்றும் இஸ்லாமிய வங்கிகள் மற்றும் வளர்ச்சியடைந்த நிதி நிறுவனங்கள் சி.ஐி.சி-யின் சிறந்த வியாபார ஆதரவாளர் விருந்துகளைப் பெற்றுள்ளன.