21. எவ்வாறு என் மாத கடன் தொகை மற்றும் கட்டணம் செலுத்தும் அட்டவணையை கடன் கணிப்பொறி மூலம் கணக்கிடுவது ?

கடன் விண்ணப்பிக்கும் ஆர்வம் இருந்தால், நீங்கள் கடனை திருப்பி செலுத்தும் மாத தவணை அல்லது பண அட்டவணையை கடன் கணிப்பொறி மூலம் ஒரு ஆலோசனையாகப் பெறலாம்.
கடன் கணிப்பொறியை பயன்படுத்த பின்வரும் தகவல்கள் உங்களுக்கு தேவை :

  • கடன் தொகை: இது நீங்கள் விண்ணப்பிக்கும் மொத்த தொகையாகும். இதில் வட்டி அல்லது கட்டணங்கள் ஆகியவை சேர்த்துக் கொள்ளவில்லை.
  • மாத வட்டி விகிதம்:இந்த வங்கி வழங்கிய வட்டி வீதம், உங்களுக்கு கொடுக்கும் கடன் காலத்தை குறிக்கும்.
  • மாத தவணை செலுத்தும் காலம்:இந்த கடன் காலம்- நீங்கள் கடன் வழங்கப்பட்ட நாள் முதல் கடனைச் செலுத்தி முடிக்கும் காலம் வரையாகும்.
  • கடனை திருப்பி செலுத்தும் அட்டவணை: “ஆம்” என்று கிளிக் செய்தால், முழுமையான கடனை திருப்பிச் செலுத்தும் அட்டவணையைப் பார்க்கலாம். இது உங்களின் கடன் மாத தவணையையும் ஒவ்வொரு மாத இறுதியிலும் கடன் மீதம் மற்றும் வட்டி ஆகியவற்றைக் கொடுக்கும்.“இல்லை” என்று கிளிக் செய்தால், உங்கள் மாத கட்டணம் செலுத்தும் தொகையைக் காட்டும். “கணக்கிடுதல்” என்று கிளிக் செய்தால், நீங்கள் கோரிய தகவல்களைப் பெறலாம்.