பேரிடர்  நிவாரண வசதி 2017  (DRF) & பேரிடர்  நிவாரண இஸ்லாமிக் வசதி 2017  (DRF-i) 

குறிக்கோள்

பேரிடர்  நிவாரண வசதி 2017  (DRF) & பேரிடர்  நிவாரண இஸ்லாமிக் வசதி 2017  (DRF-i) குறிக்கோள் என்னவென்றால் அண்மையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவும், வியாபாரங்களுக்கு புதிய நிதியுதவி வழங்குவதன் மூலம், அவர்களது வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்க்கும் உதவுகிறது.   

மொத்த ஒதுக்கீடு

RM500 மில்லியன் 

விண்ணப்ப நடைமுறைகள்
எல்லா  பங்கேற்கும் நிதி நிறுவனங்கள் வழி நிதியுதவி விண்ணப்பம் செய்யப்படலாம்.  பங்கு பெறும்  நிதி நிறுவனங்களின், வழக்கமான மற்றும் பாதுகாப்பான விண்ணப்ப முறை அடிப்படையில் ஒப்புதல் அளிக்கப்படும்.

பங்கு பெறும்  நிதி நிறுவனங்கள் (PFIs)

பின்வருமாறு வரையறுக்கப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்கள்களும் இதில் அடங்கும்: –

 • நிதி சேவைகள் சட்டம் 2013 (FSA) கீழ் உரிமம் பெற்ற வங்கிகள்;
 • இஸ்லாமிய நிதி சேவைகள் சட்டம் 2013 (IFSA) கீழ் அனைத்து உரிமம் பெற்ற இஸ்லாமிய வங்கிகள்;
 • மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் சட்டம் 2002 (DFIA) கீழ் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து வளர்ச்சி நிதி நிறுவனங்கள்.

 திட்டம் இடம் பெறும் காலம் இத்திட்டம் 8 நவம்பர் 2017 முதல்  31 மே 2018 வரை கிடைக்கும்.

 

தகுதி வரம்பு

 • SME களின் பொருளாக்க வரையறைக்குள் கொண்டிருக்க வேண்டும்.(விவரங்களுக்கு, தயவு செய்து இங்கே கிளிக்செ ய்யவும்)
 • மலேசியாவில் வாழும் மலேசியர்கள் மற்றும் குறைந்தபட்சம் SME களில் 51% பங்குகளை வைத்திருக்க வேண்டும்.
 • பின்வரும் அடிப்படைகளை நிறைவேற்றும் SMEக்கள் நிதி பெற தகுதியுடையவர் :

i. தேசிய பேரழிவு மேலாண்மை நிறுவனம்(NADMA) அல்லது மற்ற தகுதிவாய்ந்த அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட ஒரு பேரழிவு பகுதியாக வரையறுக்கப்பட்ட மாவட்டங்களில் அமைந்திருக்கவேண்டும். (விபரங்களுக்கு, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்)

ii.  மலேசிய நிறுவன ஆணையத்தில் (SSM); அல்லது சபா மற்றும் சரவாக் மாவட்ட அலுவலகம் /  அதிகாரத்தில் உள்ளவர்கள்; அல்லது நிபுணத்துவ சட்டரீதியான அமைப்புகளிடம் பதிந்திருக்க வேண்டும்.

iii.  சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில்(SME) ,பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் பங்கு விகிதம் 20%-க்குள் உட்பட்டிருக்க வேண்டும்;

கடன் வகை

தவணை கடன்

கடன் தொகை

 • குறைந்த அளவு இல்லை·
 • ஒரு சிறு மற்றும் நடுத்தர நிறுவனத்திற்கு (பொதுவான பங்குதாரர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு உட்பட) அதிகபட்ச நிதியுதவி தொகையான RM500,000  நிதியளித்தல் .

நிதி நோக்கம்·

 • இயற்கை பேரழிவுகளால் சேதமடைந்த சொத்துக்களை, வணிக ரீதியான பயன்பாட்டிற்கு (எ.கா. தாவரங்கள் மற்றும் இயந்திரங்கள்) சரிசெய்தல் மற்றும் / அல்லது மாற்றுதல்; மற்றும் / அல்லது·
 • மூலதனம்

கடன் வசதி இவற்றிக்கு பயன்படுத்தப்படக்கூடாது·

 • தற்போதுள்ள கடன் / நிதியளிப்பு வசதிகளை மறுசீரமைத்தல் ;
 • ஷரியா உடன்பாடு-அல்லாத வணிக நடவடிக்கைகள் (DRF-i 2017- க்குப் பொருந்தும்)

இலாப விகிதம்·

 • 2.25%  ஒரு ஆண்டு·
 • இந்த வசதிக்காக எந்தவிதமான இணைப்பும் தேவை இல்லை.

கால தவனை

முதல் கடன் தொகையை வழங்கிய 5 ஆண்டுகள் வரை, முதல் ஆறு (6) மாதங்களில் முதன்மை தொகை மற்றும் இலாபம் செலுத்துவதற்கு தடையுத்தரவு காலம் கொடுப்பதோடு  மற்றும் கடனை செலுத்த தவறிய நிதியாக இந்த தடையுத்தரவு காலத்தில் பதிவாக்க கூடாது.

உத்தரவாதம் பாதுகாப்பு ·

 • பி.என்.எம் (BNM) வழியாக  சி.ஜி.சி  60%  உத்தரவாதத்தை முதன்மை தொகையில் மற்றும் சாதாரண இலாப விகிதத்தில் வழங்க வேண்டும்.  மீதமுள்ள 40%   நிதி நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும்.·
 • கடன் நிறைவு பெரும் தேதியுடன் , அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை  உத்தரவத பாதுகாப்பு அமல்படுத்தப்படும்.

உத்தரவாத கட்டணம் 

வாடிக்கையாளருக்கு எந்தவொரு உத்தரவாத கட்டணமும் விதிக்கப்படாது.