ஜெசிகா  செவ் செங் லியான்

நிர்வாக செயற்குழு அல்லாத இயக்குனர்

ஜெசிகா ச்யூ செங் லியான் அவர்கள் சி.ஜி.சி 16 ஆகஸ்ட் 2017 அன்று சி.ஜி.சி வாரியத்தில் நியமிக்கப்பட்டார்.

ஜெசிகா ச்யூ அவர்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் சிபிஏ ஆஸ்திரேலியாவில் ஒரு இணை உறுப்பினர் ஆவார்.

ஜெசிகா ச்யூ அவர்கள் நிதித்துறையில் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை பிரிவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டுள்ளார். தற்போது, இவர் பேங்க் நெகாரா மலேசியவில் துணை கவர்னர் (BNM) மற்றும் நிதி திடநிலை

மற்றும் நிதித்துறை வளர்ச்சி, அத்துடன் நிறுவன வளர்ச்சி மற்றும் மத்திய வங்கிக்கு மையப்படுத்தப்பட்ட பகிர்வு சேவைகள் போன்ற பொறுப்புக்களை வகித்து வருகிறார்.

இவர் தற்போது மலேசிய கணக்கியல் தரநிலை வாரியத்தின் கிரெடிட் கவுன்சிலிங் வாரிய உறுப்பினர் மற்றும் கடன் மேலாண்மை நிறுவனம் (மலேசியா) மற்றும் பி.என்.எம் சார்பாக நிதி அங்கீகார நிறுவன தலைவர் (மலேசியா) ஆகியவற்றில் ஆலோசகராக உள்ளார்.

ஜெசிகா  அவர்கள் நிதித்துறை ஒழுங்குமறை மற்றும் மேற்பார்வையில்  20  வருட கால அனுபவம்  கொண்டுள்ளார்.

 வங்கி மற்றும் காப்பீட்டு துறைகளுக்கு பல்வேறு திறன்களை உருவாக்கம் விவேகமுள்ள மற்றும் மூலோபாயக் கொள்கைகள் கொண்டு அவர் பணியாற்றியுள்ளார்.

Close

சூங் தாக் ஓன்

மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனர்

சூங் தாக் ஓன் அவர்கள் சி.ஜி.சி-யின் வாரிய மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனர் ஆவார். இவர் 20 ஜனவரி 2017 அன்று இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

சூங் மலாயாப் பல்கலைக்கழகத்தில் (கணிதம்) அறிவியல் இளங்கலை (First Class) பட்டம்,  ஆசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் அறிவியல் முதுநிலை பட்டம் மற்றும் சிங்கப்பூர் மேனேஜ்மெண்ட் பல்கலைக்கழகத்தின்  நிர்வாக இயக்குநர்  டிப்ளமோ பட்டம் போன்றவற்றை  பெற்றுள்ளார்.

சூங் தற்போது மலேசியா FIDE கருத்துக்களம் வாரியங்கள் மற்றும் சிங்கப்பூர் என்.டி.யூ.சி வருமான காப்புறுதி கூட்டுறவு மற்றும் ஸ்டார் மீடியா குழு பெர்ஹாட் ஆகிய சுதந்திரமான ஒரு நிர்வாக உறுப்பினரல்லாத இயக்குனராக (INED) உள்ளார். இவர் முன்னர் ஆர்.எச்.பி வங்கி வாரியங்கள், ஆர்.எச்.பி இஸ்லாமிய வங்கி, ஆர்.எச்.பி இந்தோசீனா வங்கி, ஆர்.எச்.பி இந்தோசீனா பாதுகாப்பு மற்றும் ஆர்.எச்.பி தனியார் பங்கு போன்ற INED-யில் பணியாற்றியுள்ளார்.

சூங்,  வங்கி மற்றும் காப்பீடு தொழில்களில் தொழில்நுட்பம், மூலோபாயம் மற்றும் உருமாற்றம் நிபுணத்துவம் பெற்றுள்ளார். அவர்  ஆசியான் டிஜிட்டல் தொடக்க சுற்றுச்சூழல் அமைப்புக்கு உறுப்பினராக  இருப்பதோடு ,அங்கு அவர் அடிக்கடி டிஜிட்டல் மற்றும் FinTech சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை வழங்க அழைக்கப்பட்டார்.

சூங் , 24 ஆண்டுகள் அக்சன்சர் இருந்தது, அங்கு அவர் ஆசியா-பசிபிக் நிதி சேவைகள் ஆற்றி ஒரு மூத்த பங்குதாரராக ஓய்வு பெற்றார். அவர் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, தாய்லாந்து, சீனா, ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகளின் 20 க்கும் மேற்பட்ட பெரிய உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிகள் மற்றும் காப்பீட்டு மூலோபாய முயற்சிகள் வழிவகுத்ததும் மட்டுமின்றி மலேஷியா, சிங்கப்பூர் தேசிய கட்டணம் திட்டங்களில் பங்காற்றினார். சூங் பல்வேறு மற்றும் கீழோட்டம் செயல்பாடுகளில் ஏழு (7) ஆண்டுகள் பணியாற்றி, தனது வாழ்க்கையை பெட்ரோனாஸ் நிருவனத்தில் தொடங்கினார்.

 

Close

திரு.சுரேஷ் மேனன்

நிர்வாக உறுப்பினரல்லாத இயக்குனர்

திரு.சுரேஷ் மேனன் என்பவர் சிஜிசியின் நிர்வாக உறுப்பினரல்லாத இயக்குனர் ஆவார். ஜுலை 17, 2014 இல், அவர் சி.ஜிசி குழுவில் நியமிக்கப்பட்டார்.

திரு.சுரேஷ் அவர்களுக்கு உற்பத்தி மற்றும் சர்வதேச நிதி மற்றும் கடன் சந்தைகள் போன்ற பல்வேறு துறைகளில் 35 ஆண்டு காலம் அனுபவம் உள்ளது. அவர் கடன் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடு, தொழில் வழிகாட்டி, சிறந்த மதப்பீடு செயல்முறைகள் ,கடன் அறிக்கை எழுதுதல், மேற்கொள்ளும் முயற்சி மற்றும் வளர்ச்சி, நிறுவனம் மற்றும் நிதி பகுப்பாய்வு, பணியாளர்கள் மற்றும் திறன் அபிவிருத்தி, செயற்பாடுகள் மற்றும் தயாரிப்பு நிர்வாகம், அதிகாரம் பெற்ற திட்ட நிர்வாகம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றுள்ளார்.

திரு.சுரேஷ் ரேம் வேறால்டிங்ஸ் பெர்ஹாட் (முன்னர் மலேசியா பெர்ஹாட் மதிப்பீடு நிறுவனம் என அழைக்கப்படும்) நிறுவனத்தை அமைக்க ஒரு கருவியாக இருந்தார். அவர் 18 ஆண்டுகளாக பல சேவைகளில் மற்றும் நிறுவனம் அதன் உச்சத்தை அடைய முன்வகித்தார். அவர் ரேம் குழுவின் உறுப்பினராகவும் மதிப்பீட்டு குழு உறுப்பினராகவும் இருந்தார். இறுதியாக, அவர் ரேம் நிர்வாக இயக்குனராகவும் இருந்தார்.

அவர் சர்வதேச அமைப்புகளான ஆசியா முன்னேற்ற வங்கி, வர்த்தக அறிவுரை குழு மற்றும் ஆசியாவில் கடன் மதிப்பீடு சங்கம் ஆகிய முன்னேற்ற திட்டங்களில் பங்கெடுத்துள்ளார். அவர் ACRAA பயிற்சி தலைவாரக இருந்தார். அவர் சிறுபான்மை பங்குகளை கண்காணிப்புக் குழுவான(MSWG) மலேசிய கார்ப்பரேட் கவர்னன்ஸ் குறியீட்டு 2009, 2010 மற்றும் 2011 ஆகீய பிரதான குழு ஒரு உறுப்பினராக இருந்தார்.

திரு. சுரேஷ் ஜீலை 17, 2014-யிலிருந்து ஒரு நிறுவன உறுப்பினராகவும் சி.ஜி.சி.யில் துணை நிறுவனமான மலேசியா கடன் பணியக நிறுவனத்தின் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

2010 முதல், அவர் பல நாடுகளின் நிதி அமைப்புகளுக்கும் அதிகாரிகளுக்கும் சுதந்திர மூலதன சந்தை ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்கி வந்தார். தற்பொழுது, அவர் பசிபிக் அறங்காவலர்கள் பெர்ஹாட்டில் ஒரு நிறுவன உறுப்பினராக இருக்கின்றார்.

திரு. சுரேஷ் 1979- ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப இளங்கலையில் கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பயில் பட்டம் பெற்றா

1985-ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ், ஆசிய மேலாண்மை நிறுவனத்தில் அவர் வணிக மேலாண்மை முதுநிலை பட்டம் பெற்றார்.

Close

டத்தோ டேவிட் சுவா கோக் தீ

மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனர்

டத்தோ டேவிட் சுவா அவர்கள் சி.ஜி.சி வாரிய மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனர் ஆவார். இவர் 15 பிப்ரவரி 2013 அன்று இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இவர் டீ.சி & ஏ குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இவர் நீண்ட காலமாக வீடமைப்பு மற்றும் சொத்து நிர்வாக துறையில் ஈடுபட்டு வருகிறார். வணிக மற்றும் தொழிற்துறைகளிலும் அனுபவமிக்கவர்.

தற்பொழுது டத்தோ டேவிட் சுவா அவர்கள் மலாயா பல்கலைகழக இயக்குனர்கள் குழு உறுப்பினராகவும், மலாயா பல்கலைகழகத்தின் முழு கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் யூ.எம் ஹோல்டிங்ஸின் தலைவராகவும் திகழ்கிறார்.

இவர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பல பிரபலமான பதவிகளை ஏற்று வருகிறார். அவை வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சின் “சிறந்த தொழிற்துறை விருது” தேர்வு செய்யும் சபையின் உறுப்பினர், மலேசிய நிறுவனங்கள் ஒருமைப்பாட்டுக்கான வணிக ஆலோசகர் குழு உறுப்பினர், மலேசிய லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் ஆலோசனை மற்றும் தடுப்புக் குழு உறுப்பினர் போன்ற பதவிகள் ஆகும்.

இவர் மலேசிய சீன வர்த்தக மற்றும் தொழிற்துறை சபையின் தலைமை ஆலோசகராகவும் மலேசியா-சீனா வர்த்தக சபையின் இயக்குனராகவும் கடனுதவி பிரிவு குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

டி.பி.கே.எல் ஆலோசகர் குழு உறுப்பினர், தேசிய பொருளாதார ஆலோசனை சபையால் உறுப்பினர் (1990) மற்றும் அதன் துணைத் தலைவர் (1999) போன்ற பதவிகள் அவர் வகித்த சில முக்கிய பதவிகளாகும்.

Close

டத்தோ அகில் நாட்

தலைவர்

டத்தோ அகில் நாட் 18 ஜூன் 2013-இல் சி.ஜி.சி வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இவர் புருனெல் பல்கலைகழகத்தில் பொருளியல் துறையில் இளங்கலை பட்டமும், லண்டன் காஸ் வணிக வித்தியாசாலையில் நிதியியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றவர். ஹாவர்ட் வணிக வித்தியாசாலையில் இவர் மேம்பட்ட நிர்வாக திட்டக் கல்வியையும் பெற்றிருக்கிறார்.

தற்பொழுது இவர் மெனுலாய்ப் இன்ஷுரன்ஸ் பெர்ஹாட், மற்றும்மெனுலாய்ப் எசெட் மெனெஜ்மெண்ட் ஆகிய மேலாண்மை குழுவின் உறுப்பினரல்லாத இயக்குனர் ஆவார். எக்சிம் பேங்க் மற்றும் சகாமாஸ் பெர்ஹாட்டின் மேலாண்மை குழு உறுப்பினரல்லாத சுதந்திர இயக்குனரும் இவர் ஆவார். அதுமட்டுமின்றி சோகோ (கே.எல்) டிப்பார்ட்மண்டின் மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனராகவும் யாயாசான் துன் அப்துல் ரசாக் அறங்காவலர் சபை உறுப்பினராகவும் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்தின் முதலீட்டுக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

டத்தோ அகில் நாட் அவர்கள் பெருநிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள் மற்றும் இஸ்லாமிய நிதியியல் போன்ற துறைகளில் பரந்த அனுபவங்களை பெற்றிருக்கிறார். இவர் 1977-இல் பூமிபுத்ரா மெர்ச்சண்ட் பெங்கர்ஸ் பெர்ஹாடின் பெருநிறுவன நிதி மேலாளராக தனது பணியைத் தொடங்கினார். அந்நிறுவனதின் மூத்த மேலாளர், பெறுநிறுவன வங்கியின் தலைமை இயக்குனர் மற்றும் அதன் துணை தலைவர் போன்ற முக்கிய பதவிகளையும் வகித்துள்ளார்.இவர் சுமிதோமோ மிட்சுய் பேங்கிங் கார்பரேஷன் மலேசியா பெர்ஹாட்டின் முன்னால் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Close

டத்தோ ஹாஜி சையத் மோஹிப் சையத் கமாருல்சமான்

மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனர்

டத்தோ ஹாஜி சையத் மோஹிப் அவர்கள் சி.ஜி.சி மேலாண்மை குழு உறுப்பினரல்லாத தலைமை இயக்குனர் ஆவார். இவர் 15 பிப்ரவரி 2014 அன்று இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

டத்தோ ஹாஜி சையத் மோஹிப் அவர்கள் பட்டய காப்புறுதி பயிற்சியாளராகவும், மலேசிய காப்புறுதி நிறுவகத்தின் உடனுழைப்பாளராகவும், பட்டய இஸ்லாமிய நிதியியல் வல்லுனர்கள் சங்கத்தின் அமலாக்க உறுப்பினராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் வழக்கமான காப்பீடு, மறு காப்பீடு மற்றும் தகாபுஃல் போன்ற துறைகளில் 38 வருட அனுபவத்தை கொண்டவர் மட்டுமல்லாது பல உள்நாட்டு மற்றும் பன்னாட்டு காப்புறுதி நிறுவனங்களை மேலாட்சியும் செய்திருக்கிறார்.

தற்பொழுது இவர் மலேசிய நிறுவன நிதியியல் பயிற்சித்தளமான ஆசிய நிதியியல் நிறுவனத்தின் உறுப்பினராகவும், மலேசிய காப்புறுதி நிறுவகத்தின் உறுப்பினராகவும் அதன் மேலாண்மை குழுவினராகவும் செயல்பட்டு வருகிறார்.

இவர் உலகலாவிய இஸ்லாமிய நிதியியல் பல்கலைகழக சர்வதேச கல்வி மையம் அமைத்திருக்கும் வல்லுனர்கள் வளர்ச்சிக் குழு உறுப்பினராகவும் அம்மையத்தின் கல்வித் தர உத்தரவாதக் குழு மற்றும் அங்கீகாரக் குழு உறுப்பினராகவும் பொறுப்பாற்றுகிறார்.

Close

திரு. தியோ கொக் லின்

மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனர்

திரு தியோ லின் அவர்கள் சி.ஜி.சி மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனர் ஆவார். இவர் 27 ஜூன் 2014 அன்று இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இவர் 2002 ஆம் ஆண்டு செகியூரிடி கமிஷனால் அனுமதிக்கப்பட்ட நிதி மேலாண்மை நிறுவனமான சிங்குலர் அசெட் மேனேஜ்மண்ட் சென்ட். பெர்ஹடின் தோற்றுவிப்பாளரும் அதன் தலைமை முதலீட்டு அதிகாரியும் ஆவார்.

1987 ஆம் ஆண்டு சிட்டி பேங்க் மலேசியாவில் தனது பணியை தொடங்கிய திரு. தியோ அவர்கள் வங்கி துறை, கடனுதவி, முதலீட்டு துறை மற்றும் நிதி ஸ்தபனங்கள் போன்றவற்றில் 25 வருடங்கள் அனுபவம் கொண்டவர். அதனை தொடர்ந்து இவர் பாரிங்ஸ் மலேசியா, எச்.எஸ்.பீ.சீ ரீசர்ச் மலேசியா மற்றும் யூ.ஓ.பீ கை ஹியான் சிங்கபூர் போன்ற நிறுவனங்களில் சேர்ந்து பங்காற்றினார். இவர் ஆராய்ச்சிகளுக்காகவும் பல நிறுவன பயணங்களுக்காகவும் ஆசியான் மற்றும் வடக்காசியா முழுவதும் பல பயணங்கள் மேற்கொண்டிருக்கிறார்.

இவர் மின் பொறியியல் மற்றும் நிதி துறை என்ற இரண்டு துறைகளில் முதல் தர இளங்கலை பட்டம் பெற்றவர். இவர் மலேசியாவின் ஆரம்பகால பட்டய நிதி ஆய்வாளர்களில் ஒருவரும் சீ.எப்.ஏ சொசாய்ட்டி மலேசியாவின் முன்னால் தலைவரும் ஆவார்.

திரு. தியோ அவர்கள் கோலாலும்பூர், சிலாங்கூர் சீனர் வர்தக சபை உறுப்பினர். தற்பொழுது இவர் இச்சபையின் அரசிறை மற்றும் வணிக ஆராய்ச்சி குழுவின் தலைவராகவும் திகழ்கிறார். சிங்குலர் அசெட் மேனேஜ்மண்ட் (சிங்கபூர்) நிறுவனத்தின் நிறுவரும் தலைமை முதலீட்டு அதிகாரியும் இவர் ஆவார்.

Close

திரு. ஒங் எங் பின்

மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனர்

திரு ஒங் எங் பின் அவர்கள் சி.ஜி.சி மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனர் ஆவார். இவர் 14 அக்டோபர் 2014 அன்று இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

ஆகஸ்ட் 2014-ல் ஓ.சி.பி.சி பேங்க் மலேசியா பெர்ஹாடின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனை தவிர்த்து, திரு. ஒங் அவர்கள் மலேசிய வங்கிகள் சங்கத்தின் சபை உறுப்பினர் ஆவார்.

ஈ2 பவர் செண்ட். பெர்ஹாட், பான் ஹொங் லியொங் & கம்பெனி செண்ட். பெர்ஹாட், மலேசியா நோமினி (அசிங்) செண்ட். பெர்ஹாட், மலேசியா நோமினி (தெம்பாதான்) செண்ட். பெர்ஹாட் மற்றும் ஓ.சி.பி.சி நோமினி (மலேசியா) செண்ட். பெர்ஹாட் ஆகிய நிறுவனங்களின் இயக்குனரும் இவர் ஆவார்.

இவர் பெருநிறுவன நிதியியல் துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவர். இத்துறையில் இவரது 26 வருட கால அனுபவம் 1988-ல் ஓ.சி.பி.சி வங்கியில் தொடங்கியது. 2004-ல் பெருநிறுவன நிதியியல் துறையின் தலைவராகவும், அதன் பின் 2012-ல் வர்த்தக வங்கி துறையின் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டார்.

திரு. ஓங் யூ.கே, மன்செஸ்தர் பல்கலைக்கழகத்தில் கணக்கியல் மற்றும் நிதியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்.

Close

நட்சிரா அப்துல் ரஷீத்

மேலாண்மை குழு உறுப்பினரல்லாத இயக்குனர்

நட்சிரா அப்துல் ரஷீத் அவர்கள் சி.ஜி.சி மேலாண்மை குழு உறுப்பினரல்லாத தலைமை இயக்குனர் ஆவார். இவர் 22 அக்டோபர் 2015 அன்று இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

 தற்போது, நட்சிரா அப்துல் ரஷீத் அவர்கள் CIMB முதலீட்டு வங்கி நிர்வாக அல்லாத இயக்குநராக பணியாற்றுகிறார். அவர் மலேசிய பிரிவுக்கு சிபிஏ ஆஸ்திரேலியா பிரதேச சபை உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். அவர் சிபிஏ ஆஸ்திரேலியாவில் ஒரு உறுப்பினராகவும் மற்றும் மலேசிய கணக்காளர்கள் நிறுவனத்தில் ஒரு உறுப்பினராகவும் இருக்கிறார்.

நட்சிரா அப்துல் ரஷீத் அவர்கள் பத்திர சந்தை மற்றும் வங்கி துறையில் தொழில்முறையில் 25 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது.

அவர் ஒரு வங்கி பரிசோதகர் என பேங்க் நெகாரா மலேஷியா உள்ள தனது தொழிலை தொடங்கினார் பின்னர், ஒரு நிதி நிறுவனத்தில் நிதி செயல்பாடு தலைமை அதிகரியாக பணிபுரிந்தார். அவர் 1999 இல் பர்சா மலேஷியா குழுமத்தில் சேர்ந்து, நிதி நிறுவனங்கள் குழு மற்றும் நிர்வாக பிரிவுகளில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். அவர் 2006 முதல் 2014 வரை பர்சா மலேஷியா நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி பதவியை வகித்ததுள்ளார்.

நட்சிரா அப்துல் ரஷீத் அவர்கள் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தில் கணக்கியல் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் .

 

Close
Y.Bhg. Dato' Agil Natt
Chairman
Y.Bhg. Datuk David Chua Kok Tee
Non-Executive Director
Y.Bhg. Dato’ Hj. Syed Moheeb Syed Kamarulzaman
Non-Executive Director
Teoh Kok Lin, CFA
Non-Executive Director
Suresh Menon
Non-Executive Director
Y.Bhg. Dato’ Ong Eng Bin
Non-Executive Director
Nadzirah Abd Rashid
Non-Executive Director
Choong Tuck Oon
Non-Executive Director
Jessica Chew Cheng Lian
Non-Executive Director

Terms of Reference of the Board of Directors

The Board of Directors of Credit Guarantee Corporation Malaysia Berhad is guided by their Terms of Reference.   Download
Reserved Matters, all strategic decisions and investments decisions are made at the Board of Directors Meetings after due processes, discussions and deliberations.


Terms of Reference of the Board Oversight Committees

The following Board Oversight Committees are established to assist the Board of Directors of Credit Guarantee Corporation Malaysia Berhad in carrying out its responsibilities:-

1. Board Governance and Audit Committee; Download
2. Board Risk Management Committee; Download
3. Board Investment Committee; Download
4. Board Nomination and Remuneration Committee; Download
5. Board Bumiputera Development Committee; and Download
6. Board IT Committee. Download