BizMula-i

நோக்கம்

BizMula-i, 4 ஆண்டுகளுக்குக் குறைவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதிய வர்த்தகங்களுக்கான நேரடி நிதியுதவி திட்டம். இத்திட்டம் தேசிய வங்கியின் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிதியுதவியைக் கொண்டு இயங்குகிறது.
அனைத்து வர்த்தகத் துறையும் இதின் அடங்கும் (முதன்மை வேளாண்மை மற்றும் நுன் தொழில் தவிர)

நிதியுதவியின் நோக்கம்

* வேலை மூலதனம்; மற்றும்/அல்லது
* சொத்து வாங்குதல் (எ.கா: உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் வாங்குதல்)

இவற்றிற்கு நிதியதவி பயன்படுத்தப்படக் கூடாது

* பங்குகள் வாங்குதல்
* தற்போதுள்ள கடன் / நிதியுதவி வசதிகளை மறுநிதியளித்தல்
* நிலம் வாங்குதல்/ ரியல் எஸ்டேட் முதலீடு
* வணிக சொத்துகள் வாங்குதல்
* முதலீட்டு நிறுவனங்கள் மூலம் முதலீடு
* வர்த்தகத்தில் பங்கு முதலீடு செய்யும் பணிகள் (கடன், குத்தகை, கார்ப்பரேசன் மற்றும் காப்பீடு நிறுவங்கள் உட்பட)
* சூதாட்டம், மது, புகையிலை மற்றும் அது சார்ந்த செயல்பாடுகள் அல்லது பொருட்கள் தயாரிப்பு; மற்றும்
* ஷரியா உடன்பாடு அல்லாத வணிக இணக்கம்

விண்ணப்பதாரர் தகுதி வரம்புகள்

* தேசிய SME மேம்பாட்டு மன்றத்தின் வரையறைக்குள் உட்பட்டு இருக்க வேண்டும் (மேல் விவரங்களுக்கு இந்த விசையை அழுத்தவும் )
* வர்த்தகம் மலேசியர் கட்டுப்பாடு மற்றும் உரிமைத்துவம் கொண்டதாக இருக்க வேண்டும். (குறைந்தபட்சம் 51% பங்குகள் கொண்டிருக்க வேண்டும்), அதோடு வர்த்தகம் மலேசியாவில் அமைந்திருக்க வேண்டும்.
* வர்த்தக பதிவு மற்றும்/ஈடுபாடு 4 ஆண்டுகளுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
* முக்கிய முடிவெடுக்கும் நபர்/ வாரிசு விண்ணப்பிக்கும் சமயத்தில் குறைந்தபட்சம் 21 வயதிற்குட்பட்டவராகவும், முழு தவணைச் செலுத்தும் சமயத்தில் 65 வயதிற்குட்பட்டும் இருக்க வேண்டும்.
* வர்த்தகம் மலேசிய நிறுவன ஆணையத்தில் (SSM); அல்லது சபா மற்றும் சரவாக் மாவட்ட அலுவலகம்/அதிகாரிகள்; அல்லது நிபுணத்துவ சட்ட ரீதியான அமைப்புகளிடம் பதிந்திருக்க வேண்டும்.
* பங்குதாரர்களின் நிதியிருப்பு 5 மில்லியனுக்கு மேற்போகாமல் இருக்க வேண்டும்.
* சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்களில் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் (ஏதேனும் இருந்தால்) பங்குகள் 20%-கும் மேற்போகாமல் இருக்க வேண்டும்.

நிதியுதவித் தொகை

* குறைந்தபட்சம் – RM30,000
* அதிகபட்சம் – RM300,000

நிதியுதவி வகை

* தவணைக்குட்பட்ட நிதியுதவி

நிதி விகிதம்

* இலாப விகிதம்: தேசிய வங்கியின் (BNM) நிதியுதவி விகிதம் 1.50% (19 ஜூன் 2017-இல்) + ஆண்டுக்கு 6.50%.
உச்சவரம்பு இலாப விகிதம்: ஆண்டுக்கு 12.00%
* BNM நிதியளிப்பு விகிதம் BNM-இன் மாற்றத்திற்கு உட்பட்டது.

நிதியுதவி தவணைக்காலம்

* 5 ஆண்டுகள் வரை

விண்ணப்பிக்கும் முறைகள்

* சி.ஜி.சி.யின் அனைத்து கிளைகளிலும் விண்ணப்ப படிவம் கிடைக்கும் அல்லது விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய இந்த விசையை அலுத்தவும் <ahref=”https://www.cgc.com.my/download-forms?lang=ta”>.
* முழுமையான விண்ணப்ப பாரங்களை துணை ஆவணங்களோடு இணைத்து எந்த CGC கிளைகளிலும் சமர்ப்பிக்கலாம்.