பணமோசடி எதிர்ப்பு மற்றும் தீவிரவாத நிதியீட்டல் (“ஏஎம்எல்/சிஎஃடி”) (“AML/CFT’), நாட்டின் புகழ், முதலீட்டு சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக சீர்கேடுகளுக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தலாக விளங்குகிறது. அதிவேகமாக வளர்ந்து வரும் நிதி சேவைத்துறை மற்றும் தொழில்நுட்பம், சட்ட அமலாக்கத்துறைக்கும் முகவர்களுக்கும் பெரும் சவாலாக அமைந்துள்ளது. குற்றவாளிகள் தங்களின் சட்டவிரோத நிதிகளை வெள்ளைப் பணமாக மாற்ற நிதி நிறுவனங்களை அணுகுகிறார்கள். மலேசிய தேசிய வங்கி (“BNM”) பணமோசடி மற்றும் தீவிரவாத நிதியீட்டலைத் தவிர்ப்பது, கண்டறிவது மற்றும் அறிக்கையிடுவதுப் போன்ற பொறுப்புகளைத் (சர்வதேச தரத்திற்க்கு) தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுள்ளது.

கடன் உத்ரவாத கழகம் மலேசியா பெர்ஹாட் (“கார்ப்பரேஷன்”), ஏஎம்எல்/சிஎஃடி சட்டத்தின் மிக உயர்தர இணக்கத்தை உறுதிப் பூண்டுள்ளது. மலேசிய தேசிய வங்கியின் வழிக்காட்டல்கள், ‘பணமோசடி எதிர்ப்பு மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் தொகை என்ற தீவிரவாத எதிர்ப்பு (2001)’ (“AMLATFPUAA”) மற்றும் ‘ஏஎம்எல்/சிஎஃடி’ – ‘வங்கி மற்றும் வைப்புத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனங்கள்’ (பிரிவு 1) -ஐ பின்பற்றிக் கார்பரேஷனின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியீட்டல் கார்ப்பரேஷனின் நற்பெயருக்குக் கலங்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆகையால், கார்ப்பரேஷன் தனி ஏஎம்எல்/சிஎஃடிக் கொள்கையைக் (“போலிசி”) கொண்டுள்ளது. இக்கொள்கையை இயக்குனர்கள, மூத்த மேலாண்மை மற்றும் அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். இக்கொள்கைக் கார்ப்பரேஷனின் அனைத்து நடவடிக்கைகளையும் சீராக வழி நடத்தத் துணைப்புரிகிறது. இக்கொள்கையின் மூலம் பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதி நடவடிக்கைகள் ‘பணமோசடி எதிர்ப்பு மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் தொகை என்ற தீவிரவாத எதிர்ப்பு (2001) – வில் குறிப்பிட்டதுப் போல் திறம்பட எதிர்த்துப் போராட முடிகிறது.

கார்ப்பரேஷன் பிண்பற்றும் மற்ற முக்கிய நடவடிக்கைகள் கீழ் கண்டவாறு:

  • முறையானப் பதிவுகளைப் பராமரித்தல், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைத் தயார் செய்தல் போன்றவை நியமிக்கப்பட்ட உரிய உடண்பாடு உயர் அதிகாரியால் செயலாற்றப்படும்;
  • அபாய அடிப்படையிலான வாடிக்கையாளர்களை நிறுவுதல் மற்றும் பராமரித்தல், அடையாளம் காணுதல்,சரிப் பார்த்தல் மற்றும் வாடிக்கையாளர் நடைமுறிகளை அறிந்து கொள்ளுதல் ஆகியவை அதிக ஆபத்தான வாடிக்கையாளர்களுக்கும் அரசியல் ரீதியாக தொடர்புடையவர்களுக்கும் அடங்கும்;
  • சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை ‘பைனான்சியல் இன்டேலிஜன்ஸ் என்ட் என்போர்ஸ்மண்ட் டிபார்ட்மண்ட்’ (“FIED”), மலேசிய தேசிய வங்கிக்கு அவ்வப்போதுப் புகார் செய்வதற்காகவும், வாடுக்கையாளர்களின் கணக்குகளை நுனுக்கமாக வடிக்கட்டவும் மற்றும் அடையாளம் காட்டவும் கார்ப்பரேஷன் தனி முறையைக் கொண்டுள்ளது;
  • ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையாலும் மற்றும் சட்ட அமலாக்கத்துறையாலும் தடைச் செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் கார்ப்பரேஷன் எவ்வித உறவும் வைத்துக்கொள்ளாது;
  • அந்தந்த அதிகாரவரம்புகளுக்கும் சட்டத்திற்க்கும் ஏற்ப சந்தேகத்திற்கிடமான அனைத்து நடவடிக்கைகளும் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்டத் துறைகளுக்குத் (அதிகாரிகளுக்குத்) தெரிவிக்கப்படும்;
  • சட்டரீதியான தேவைகளுக்கேற்ப வாடிக்கையாளர்களின் அனைத்து அடையாள ஆவனங்கள்/குறிப்புகள் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் வைத்திருக்கப்படும்;
  • பணமோசடி எதிர்ப்பு மற்றும் தீவிரவாத நிதியீட்டல் சம்பந்தமான தகவல் பரிமாற்றங்களும், சமீபத்ய மேம்படுத்தல்களும் பயிற்சிப் பட்டறைகளின் மூலம் கார்ப்ரேஷனின் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.